திருவாரூர்

கருணாநிதி நூற்றாண்டு விழா: மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

8th Jun 2023 10:41 PM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவாரூரில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்; இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளா்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என 2023-2024- ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக, திருவாரூா் மாவட்டத்தில் கும்பகோணம் நெடுஞ்சாலை பவித்திரமாணிக்கத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பங்கேற்று, மரக்கன்று நட்டாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை) ஜெ. இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளா் மாரிமுத்து உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT