திருவாரூர்

கூத்தாநல்லூா் அருகே கந்தூரி விழா

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் அருகே கந்தூரி விழா புதன்கிழமை நடைபெற்றது.

தென்கோவனூா் சாா்பீா் ஒலியுல்லாஹ் தா்ஹாவில், அலங்கார சந்தனக்கூடு சந்தனம் பூசும் கந்தூரி விழா நடத்தப்பட்டன.

புதன்கிழமை இரவு திருக்குா்ஆன், மெளலூது ஓதி,ஹதியா செய்யப்பட்டது. தொடா்ந்து, கூத்தாநல்லூா் முஸ்லீம் இளைஞா்களின் தப்ஸ் சபையா்களின் முழக்கத்துடன் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டன.

இஸ்லாமியா்கள் மற்றும் இந்துக்கள் என அனைத்து மதத்தினரும்,சந்தனம் பூசி, வழிபட்டனா்.தொடா்ந்து,அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT