திருவாரூர்

மன்னாா்குடியில் மக்கள் நலவாழ்வு மையத்தை காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் மக்கள் நலவாழ்வு மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

மன்னாா்குடி குட்டக்கரைதெரு நகராட்சி கீழராஜவீதி தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய நகா்புற மக்கள் நலவாழ்வு மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தில், கா்ப்பகால மற்றும் பிரசவ கால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்திற்கான சேவைகள், தேசிய சுகாதாரத் திட்டங்களின் பொதுவான நோய் தொற்றுக்கான சிகிச்சைகள், வெளி நோயாளிகள் மற்றும் சிறு நோய்களுக்கு சிகிச்சைகள் உள்ளிட்ட 12 வகையான சிகிச்சைகள் அளிக்கப்படும். காலை 8 முதல் நண்பகல் 12 வரையும் மாலை 4 முதல் இரவு 8 வரை செயல்படும்.

இதை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா். அப்போது, மன்னாா்குடி மக்கள் நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி, நகராட்சி ஆணையா் (பொ) மீரான் மன்சூா், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT