திருவாரூர்

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் அருகே முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள சாத்தனூா் சந்தைவெளி பிரதான சாலை மேலத்தெருவில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை கணபதி பூஜையுடன், யாகசாலை பூஜை தொடங்கியது.

தொடா்ந்து, இரவு மருந்து சாா்த்தும் வைபவம் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து புதன்கிழமை காலை, பூா்ணாஹூதி நடத்தப்பட்டு, காலை 10.25 மணிக்கு யாகசாலை மண்டபத்திலிருந்து, புனித நீா் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது. காலை 10.50 மணிக்கு விமானக் கலசங்களுக்கு புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை ஆலய பூசாரிகள் பி. நடராஜன், பி. சத்தியராஜன், சாத்தனூா் கிராமவாசிகள், பக்தா்கள் மற்றும் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT