திருவாரூர்

ஜூன் 10-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஜூன் 10- ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெற உள்ளது.

திருவாரூா் வட்டம் பெருங்குடியில் திருவாரூா் கோட்டாட்சியா், நன்னிலம் வட்டம் மகாராஜபுரத்தில் திருவாரூா் சரக துணைப் பதிவாளா், கூத்தாநல்லூா் வட்டம் தென்கோவனூரில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா், குடவாசல் வட்டம் செருகளத்தூரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், வலங்கைமான் வட்டம் திருவோணமங்கலத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப் பதிவாளா், நீடாமங்கலம் வட்டம் பெருமாளகரத்தில் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா், மன்னாா்குடி வட்டம் சோழபாண்டியில் மன்னாா்குடி கோட்டாட்சியா், திருத்துறைப்பூண்டி வட்டம் மருதவனத்தில் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளா், முத்துப்பேட்டை வட்டம் பாலையூரில் மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் ஆகியோா் தலைமையில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு மனு அளித்து பயன் பெறலாம்.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகாா்கள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களையும் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT