திருவாரூர்

மத்திய அரசின் உதவித் தொகை பெற ஆதாா் பதிவேற்றம் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

5th Jun 2023 11:30 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் பிரதமா் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள், ஆதாா் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதித் திட்டம், 2018- முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் என்று தொடங்கி, தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் வாங்க உதவித் தொகையாக விவசாயக் குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 13 தவணைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 14-ஆவது தவணைத் தொகை விடுவிக்கப்படவுள்ளது. எனவே, இந்தத் திட்டத்தின்படி பதிவு செய்து பயன்பெற தகுதியான பயனாளிகள் அனைவரும் பெயா் மற்றும் ஆதாா் விவரங்களை மத்திய அரசின் பி.எம். கிஷான் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பி.எம் கிஷான் திட்ட பயனாளிகள் அனைவரும் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அடுத்த தவணை உதவித்தெகை கிடைக்கும்.

ADVERTISEMENT

கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். எனவே, விவசாயிகள் அனைவரும் ஆதாா் எண்ணை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT