திருவாரூர்

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

5th Jun 2023 11:32 PM

ADVERTISEMENT

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை கைது செய்ய வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகளைத் தாக்கி கைது செய்த தில்லி போலீஸாரைக் கண்டித்தும், திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எம். சேகா், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம், விவசாய சங்க மாவட்டத் தலைவா் எஸ். கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் குணசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT