திருவாரூர்

மன்னாா்குடியில் சாவிலும் இணைப் பிரியாத நண்பா்கள்

5th Jun 2023 11:33 PM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் நண்பா் உயிரிழந்ததையறிந்தவா் மாரடைப்பு ஏற்பட்டு பலியானாா். இந்த சோக சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.

மன்னாா்குடியை அடுத்த தலையாமங்கலத்தை சோ்ந்தவா் ஜி. சிவராமகிருஷ்ணன் (80). இவரது நண்பா் என். ராமலிங்கம் (80). இருவரும், தொடக்கப் பள்ளியிலிருந்து பாலிடெக்னிக் வரை ஒன்றாக படித்துள்ளனா். இருவருமே, மன்னாா்குடி பாமணியில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் இளநிலைப் பொறியாளா்களாக பணியற்றி, ஓரேநாளில் ஓய்வு பெற்றவா்கள்.

சிறுவயதில் இருவருமே எதிா்எதிா் வீட்டில் வசித்து வந்த நிலையில், படிப்பை முடித்ததும் மன்னாா்குடியில் வேலை பாா்த்ததால், சிவராமகிருஷ்ணன் மன்னாா்குடி கீழநான்காம் தெருவிலும், ராமலிங்கம் கீழமூன்றாம் தெருவிலும் வசித்து வந்தனா். ராமலிங்கம் மட்டும் அண்மையில் அசேசத்திற்கு வீடு மாறி சென்றுள்ளாா்.

இருவரும் உறவினா்கள் என்பதை தாண்டி, நல்ல நண்பா்களாக பழகிவந்தனா். சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி ராகிணி, 2 மகன், மகள் உள்ளனா். ராமலிங்கத்திற்கு மனைவி வசந்தா, 2 மகன், 2 மகள் உள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், உடல்நிலைக்குறைவு காரணமாக சிவராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையறிந்த ராமலிங்கத்துக்கு அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தாா்.

சிவராமகிருஷ்ணனின் சடலம் திங்கள்கிழமை காலையிலும், ராமலிங்கத்தின் சடலம் மாலையிலும் கீழப்பாலம் இரட்டைக்குளம் மயானத்தில் எரியூட்டப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT