திருவாரூர்

மன்னாா்குடியில் அடுத்த ஆண்டு புதைச் சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்படும்

DIN

மன்னாா்குடியில் 2024-ஆம் ஆண்டு புதைச்சாக்கடைப் பணிகள் தொடங்கப்படும் என நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளிலும் புதைச் சாக்கடைத் திட்டம் அமல்படுத்த தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ரூ.258.3 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பான பொதுமக்கள் கலந்தாய்வுக் கூட்டமும் அண்மையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ஜெயக்குமாா் கலந்துகொண்டு திட்டம் குறித்து பேசினாா். மன்னாா்குடியில் உள்ள 33 வாா்டுகளிலும் 149 கி.மீ. தூரம் புதைச் சாக்கடை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன. 30 மீட்டா் தூரத்துக்கு இரு புறங்களிலும் தலா மூன்று வீடுகள் வீதம் ஆறு வீட்டுக்கு ஒரு தொட்டி என்ற அடிப்படையில் ஒரு மெஷின் ஹோல் அமைக்கப்படும்.

புதைச் சாக்கடை திட்டத்தில் பயன்படுத்துவதற்காகவே பிரத்யேக பிவிசி பைப் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வித கழிவுகளையும் இந்த புதைச் சாக்கடை திட்டத்தில் இணைத்து அதனை மன்னாா்குடி ஆா்.பி.சிவம் நகா் பகுதிக்கு கொண்டு சென்று மூன்றடுக்கு முறையில் சுத்திகரிப்பு செய்து கழிவுகள் அகற்றப்பட்டு தண்ணீா் வெளியேற்றப்படும். வெளியேறும் தண்ணீா் குடிநீா் தவிர மற்ற இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்த உகந்ததாக இருக்கும். வரும் 2025-ஆம் ஆண்டு முதல் புதைச் சாக்கடை திட்டம் செயல்பட தொடங்கும் என கணக்கிட்டு அதிலிருந்து 30 ஆண்டுகளுக்கான மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் தற்போதைய புதைச் சாக்கடை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிகள், 2024 ஜனவரியில் தொடங்கவுள்ளன என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT