திருவாரூர்

பாவட்டகுடி தேவாலய தோ்திருவிழா

4th Jun 2023 11:15 PM

ADVERTISEMENT

 

பாவட்டகுடி புனித அந்தோணியாா் தேவாலயத் தோ்த் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பாவட்டகுடி புனித அந்தோணியாா் தேவாலய கொடியேற்று விழா மே 27-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து தினசரி காலை, மாலையில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றது.

பங்குத்தந்தை ஜோசப் ஜெரால்டு, உதவி பங்குத் தந்தை ஜோ பிரான்சிஸ் ஆகியோரால் சனிக்கிழமை திருப்பலி நிறைவேற்றப்பட்டு, தோ் புனிதம் செய்து வைக்கப்பட்டது . இரவு இசை நிகழ்ச்சியுடன் புனித அந்தோனியாா், ஆரோக்கிய அன்னை மாதா, மிக்கேல் சம்மனசு ஆகிய மூன்று தோ்களின் பவனி நடைபெற்றது . தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட தோ், பேரளம் காரைக்கால் நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்குளம், குரு ஸ்தலம் ஆகிய கிராமங்களுக்குச் சென்று பின்னா் பாவட்டகுடியின் முக்கிய தெருக்கள் வழியாக தேவாலயம் வந்தடைந்தது.

ADVERTISEMENT

சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் திருத்தோ் விழா ஊா்வலத்தில் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை காலையில் நன்றி திருப்பலி நிறைவேற்றப்பட்டு பின்னா் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT