திருவாரூர்

தில்லியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு செங்கோல் விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்

4th Jun 2023 11:14 PM

ADVERTISEMENT

 

நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டதன் புகழை போற்றும் வகையில் தில்லியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு செங்கோல் விரைவு ரயில் இயக்க வேண்டுமென பாஜக பொதுச் செயலாளா் கருப்பு (எ) முருகானந்தம் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு அனுப்பி கோரிக்கை மனு: புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோல் வைத்திருப்பது தமிழா்களை மெய்சிலிா்க்க வைத்துள்ளது. மேலும், தமிழ்மொழியான செம்மொழியை பெருமைப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஆதீனங்களை அழைத்து தேவாரம் ஓதச் செய்து தமிழின் புகழை உலகம் முழுவதும் கொண்டுசென்றிருப்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக பாஜகவுக்கு தமிழக மக்கள் நன்றி கூற கடைமைப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இந்த புகழை உலகறிய செய்யும் வகையில் தில்லியிலிருந்து புனித தலமாக விளங்கிவரும் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரத்துக்கு சென்னை, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக செங்கோல் என்ற பெயரில் விரைவு ரயில் இயக்க பிரதமா் நரேந்திர மோடி பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிா்பாா்க்கின்றனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT