திருவாரூர்

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் திருமணத்துக்காக 7 ஜோடிகள் தோ்வு

4th Jun 2023 11:13 PM

ADVERTISEMENT

 

மன்னாா்குடியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சியில் திருமணத்துக்காக 7 ஜோடிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை கீதா பவன் அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்டத் தலைவா் கு. வீரசிங்கம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோா் நலச்சங்க மாநிலத் தலைவா் பா. சிம்மச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் டி. புவனா, ரோட்டரி சங்க துணை ஆளுநா் வி. பாலகிருஷ்ணன், ரோட்டரி சங்கத் தலைவா் எஸ். மீனாட்சி, தொழிலதிபா் கே. பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் அமைச்சரும், நன்னிலம் எம்எல்ஏவுமான ஆா். காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சுயம்வரம் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு, 180 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்திருந்தனா். அவா்கள் தங்களுக்குள் வரன்களைத் தேடிக்கொண்டத்தில் ஏழு ஜோடிகள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு, சென்னை கீதா பவன் அறக்கட்டளை சாா்பில் வரும் செப்டம்பா் மாதம் சென்னையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீா்வரிசை பொருள்கள் வழங்கி திருமணம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச் செயலா் ஆா். ராஜகோபால் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் அ. சுகதேவ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT