திருவாரூர்

ஊரக வளா்ச்சி அலுவலா்கள்2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

3rd Jun 2023 02:36 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சி அலுவலா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாற்றுப்பணியில் உள்ளவா்கள் உரிய இடத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும், ஊராட்சி செயலா்களை அடிக்கடி பணியிட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்தக் கோரிக்கைளை வலியுறுத்தி, மாவட்ட அளவில் 48 மணிநேர உள்ளிருப்பு போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா். இந்தப் போராட்டம் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் நேரு, ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT