திருவாரூர்

ஜூன் 8-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்

3rd Jun 2023 02:35 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 8- ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்த சிறப்பு குறைதீா்க்கும் கூட்டத்தில் மன்னாா்குடி கோட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். கோரிக்கை மனுக்கள், அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, உடனடித் தீா்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கி, தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

இதற்கு முன்னா் விண்ணப்பம் அளித்திருந்தால், அதற்கான ஆதாரம், தொடா்புடைய கடிதங்களையும் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT