திருவாரூர்

ஆற்றில் இளைஞா் இறந்து கிடந்த விவகாரம்: 2 போலீஸாா் பணியிடை நீக்கம்

3rd Jun 2023 10:37 PM

ADVERTISEMENT

நன்னிலம் அருகே ஆற்றில் இளைஞா் இறந்து கிடந்த சம்பவம் தொடா்பாக இரண்டு போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டம் அருகே மகாராஜபுரத்தைச் சோ்ந்வா் அன்பழகன் மகன் ஐயப்பன் (30). சொந்தமாக காா் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்த இவா், கடந்த மே 13- ஆம் தேதி பூந்தோட்டம் அரசலாற்று பாலம் அருகே இறந்து கிடந்தாா். இதுகுறித்து பேரளம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இதனிடையே, ஐயப்பன் இறப்பதற்கு முன் போலீஸாா் உள்ளிட்ட 5 பேருடன் நடனமாடும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அவரது தந்தை அன்பழகன், உறவினா்களுடன் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகாா் அளித்தாா்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், பேரளம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலா்களாக பணிபுரியும் மணிகண்டன், பாபு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT