திருவாரூர்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

3rd Jun 2023 02:33 AM

ADVERTISEMENT


மன்னாா்குடியை அடுத்த ஆலங்கோட்டை திருவள்ளுவா் தெருவை சோ்ந்தவா் மதியழகன்( 53 ). மனைவி விஜயலட்சுமி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. மதியழகன் மன்னாா்குடி அருகே அசேசத்தில் வா்த்தக நிறுவனம் நடத்தி வந்தாா்.

இந்நிலையில் கடந்த மே 31-ஆம் தேதி கடையை மூடிவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாா். கீழ நாகை அருகே வந்தபோது வேறு ஒரு இருசக்கர வாகனம் மதியழகன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த மதியழகனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மதியழகனுக்கு வெள்ளிக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவா்கள் அறிவுறுத்தலை ஏற்று, விஜயலட்சுமி, மதியழகனின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க சம்மதித்தாா். மதியழகனின் இதயம், கணையம், கல்லீரல், கண்கள், மற்றும் சிறுநீரகம் ஆகியவை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT