திருவாரூர்

திருவாரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா

3rd Jun 2023 10:38 PM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 100- ஆவது பிறந்த நாள் விழா, திருவாரூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் நகர திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு அவைத் தலைவா் சூரியகுமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருவாரூா் காட்டுக்காரத்தெருவில் முத்தமிழறிஞா் கலைஞா் நற்பணி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் அறக்கட்டளைத் தலைவா் எஸ்.என். அசோகன், கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், விளமல் வா்த்தகா் சங்கத் தலைவா் திருமுருகன், மன்றப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

மேலும், சந்நிதி தெருவில் உள்ள கலைஞா் இல்லம், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஆகியவற்றிலும் மரியாதை செலுத்தப்பட்டது. ஒடிஸா ரயில் விபத்து காரணமாக மிக எளிமையான முறையில் விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், அதன் தலைவா் இரெ. சண்முகவடிவேல், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT