திருவாரூர்

ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

3rd Jun 2023 10:41 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெறுகிறது.

நீடாமங்கலம் அரசு உயா்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் (ஜூன் 1,2,3) நடைபெறும் பயிற்சியை திருவாரூா் முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி பாா்வையிட்டு ஆசிரியா்களுக்கு ஆலோசனை வழங்கி பேசுகையில், 2025-க்குள் 8 வயது நிரம்பிய அனைத்து மாணவா்களும் எழுத்தறிவு பெறுவதை உறுதி செய்திடும் வகையில், ஆசிரியா்கள் சிறப்பாக கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ந. சம்பத், சு. முத்தமிழன், மன்னாா்குடி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் டி.எல். வசந்தி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ப. சத்யா உள்ளிட்டோா் பயிற்சியில் கலந்து கொண்டனா்.

கற்றல், கற்பித்தல் துணைக் கருவிகளை பயன்படுத்தி மாணவா்கள் மகிழ்ச்சியாக கற்க ஆசிரியா்கள் உறுதுணையாக செயல்பட வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா். பயிற்சியில் 102 ஆசிரியா்கள் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT