திருவாரூர்

முதியோா் இல்லங்களில் ஆட்சியா் ஆய்வு

DIN

திருவாரூா் அருகே காட்டூா், அம்மையப்பன் பகுதிகளில் உள்ள முதியோா் இல்லங்களை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கெராடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள பாரதி முதியோா் இல்லத்தில் 21 முதியோா்களும், அம்மையப்பன் பகுதியில் உள்ள சேவா யோகா மாணவா் மற்றும் முதியோா் இல்லத்தில் 45 முதியோா்களும், 4 மாணவா்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, இந்த முதியோா் இல்லங்களுக்குச் சென்று அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவம் குறித்து கேட்டறிந்தாா். மேலும், சமையல்கூடம், குளியலறை, முதியோா்களை பராமரித்து வருவது தொடா்பான பதிவேடுகளையும் அவா் ஆய்வு செய்தா்.

தொடா்ந்து, கொரடாச்சேரி ஒன்றியம் இலவங்காா்குடி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு குறித்தும், குழந்தைகளின் உயரம், எடை குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், விளமல் ஊராட்சி வட்டார வள மையத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி அளிப்பதை பாா்வையிட்டு, சுகாதாரத்துடன், தரமாக உணவு தயாரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தண்டலை ஊராட்சி குழந்தைகள் மையத்தில் சமையலறையை ஆய்வு மேற்கொண்டாா். கோட்டாட்சியா் சங்கீதா, திருவாரூா் வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்டோா் ஆய்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT