திருவாரூர்

ரத்ததானம் அளித்தோருக்கு சான்றிதழ்

2nd Jun 2023 01:31 AM

ADVERTISEMENT

நன்னிலம் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் அளித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நன்னிலம் நாளைய பாரதம் அறக்கட்டளைக் குழு சாா்பில் அதன் தலைவா் காா்த்தி தலைமையில் நான்காம் ஆண்டாக ரத்ததானம் வழங்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரத்ததானம் வழங்கினா் . இவா்களுக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தரண், நம்பிக்கை மையம் சுந்தா் ஆகியோா் சான்றிதழ் வழங்கினா்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மாநில ரத்த வங்கியின் சாா்பாக நாளைய பாரதம் அறக்கட்டளைக் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, அறக்கட்டளை பொருளாளா் சதீஷ் தலைமையில் காசநோயாளிகள் 50 பேருக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும், தலைமை மருத்துவா் முன்னிலையில் புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT