திருவாரூர்

சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு ஜூன் 20-வரை மனுக்கள் அனுப்பலாம்

DIN

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு ஜூன் 20-ஆம் தேதி வரை மனுக்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதையொட்டி, மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீா்க்கவேண்டிய பொதுப் பிரச்னைகள் குறித்து மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரா்கள், தேதியுடன் கையொப்பமிட்டு, தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு ஜூன் 20-ஆம் தேதி வரை அனுப்பலாம்.

பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீா்க்கப்படாமல் உள்ள பொதுப் பிரச்னைகள் குறித்ததாக இருக்கலாம். மனுக்கள் ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும். தனிநபா் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலை வாய்ப்பு, முதியோா் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலா்களின் குறைகள் வெளிப்படுத்துதல் ஆகியவை குறித்து இருக்கக் கூடாது.

சட்டப்பேரவை விதிகளின் வரம்புக்குள்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்துக்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரா் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது, மனுதாரா்முன்னிலையில், குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து, மனுதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வுசெய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT