திருவாரூர்

உலக புகையிலை எதிா்ப்பு தினவிழிப்புணா்வு பிரசாரம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வட்டத்தில் உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் புதன்கிழமை 100 நாள் வேலை பணியாளா்களிடம் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், குறித்தும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டு, உலக புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவாரூா் மாவட்ட பூச்சியியல் வல்லுநா் சிங்காரவேலு மற்றும் நீடாமங்கலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கௌதமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோவில்வெண்ணி சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT