திருவாரூர்

அவதூறு பேச்சு: அன்புமணி ராமதாசுக்கு கண்டனம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

உண்மை நிலையை அறியாமல் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களை அவதூறாகப் பேசிய மத்திய முன்னாள் மத்திய அமைச்சா் அன்புமணி ராமதாசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், பாமக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களை ஒருமையில் திட்டியது 20,000 மேற்பட்ட தொழிலாளா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மை நிலையை அறியாமல், பொது மேடையில் பேசியது கண்டனத்துக்குரியது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT