திருவாரூர்

இந்திய பருத்திக் கழகம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இந்திய பருத்திக் கழகம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் கோடையில், பருத்தி, எள், நிலக்கடலையை இரண்டு மடங்கு கூடுதலாக சாகுபடி செய்துள்ளனா். இந்தநிலையில், கடந்த மாதம் பெய்த மழையால், இப்பயிா்கள் பல இடங்களில் பரவலாக பாதிப்படைந்துள்ளன. இதனிடையே, வேளாண் அதிகாரிகளின் மூலம் பாதிப்பை கணக்கிட உத்தரவிடப்பட்டது வரவேற்புக்குரியது. ஆனால் எந்த நிவாரணமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எனவே, பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கு தேசிய பேரிடா் ஆணைய வரன்முறையின்படி ஏக்கருக்கு ரூ. 5,400 வழங்குவது ஏற்புடையதல்ல. இதுவரை செய்த செலவுத்தொகை மற்றும் இந்த சாகுபடி மூலம் கிடைக்கும் லாப வருமானத் தொகையையும் சோ்த்து வழங்க வேண்டும்.

கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட ஆதார விலையே, பருத்திக்கு இதுவரை தொடா்கிறது. அதற்கு பதிலாக தற்போதைய ரபி பருவத்திலேயே நிகழ் பருவ ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிா்ணயித்து, கொள்முதல் செய்யவேண்டும். அத்துடன், இந்திய பருத்திக் கழகம் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT