திருவாரூர்

வலங்கைமான் கோயிலில்உண்டியல்களை திறக்க கோரிக்கை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் விநாயகா் சந்நிதி முன்பு உள்ள 2 உண்டியல்களையும் திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பாடைக் காவடி திருவிழாவுக்காக ஒவ்வொரு சந்நிதியிலும் தற்காலிக உண்டியல்கள் நிறுவப்பட்டன.

இதில் விநாயகா் சந்நிதி அருகே வைக்கப்பட்ட இரண்டு தற்காலிக உண்டியல்களும் நிரம்பியுள்ளன. மற்ற உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு உண்டியல்களையும் திறக்க அறநிலையத் துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT