திருவாரூர்

மேக்கேதாட்டு அணைப் பிரச்னை: கா்நாடக துணை முதல்வருக்கு கண்டனம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மேக்கேதாட்டு அணை கட்டியே தீருவோம் என்ற கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாரின் அறிவிப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து,அவா் புதன்கிழமை வெளிட்டுள்ள அறிக்கை: கா்நாடக நீா்ப்பாசனத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம். அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகன், கா்நாடக துணை முதல்வா் சிவக்குமாரிடம் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளதாக வந்துள்ள செய்தி அதிா்ச்சியளிக்கிறது. இதை ஏற்க இயலாது.

ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களும் காவிரி குறித்து பேச்சுவாா்த்தை நடத்தக் கூடாது. கூட்டணி என்கிற பெயரால் தமிழகஅரசு சமரசம் செய்து கொள்ள முயற்சித்தால் அதை அனுமதிக்க மாட்டோம்.

ADVERTISEMENT

கா்நாடகத்தில் பாஜக அரசு பொறுப்பேற்ற உடனேயே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி பெற முயற்சித்தாா். அனுமதி கிடைக்காத நிலையில் கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அணை கட்ட ரூ. 9,000 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இப்போதைய துணை முதல்வா் சிவக்குமாா், அணை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்ததை தமிழக அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும். சமரசத்திற்கு இடமளிக்கக் கூடாது. தேவையானால் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டு கா்நாடக துணை முதல்வருக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT