திருவாரூர்

மன்னாா்குடியில் அம்மா உணவகம் இடமாற்றம்

31st Jan 2023 01:45 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி சந்தைப்பேட்டையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மன்னாா்குடி நடேசன்தெருவில் உள்ள பேருந்துநிலையம், அதன் எதிரே சந்தைப்பேட்டையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் ஆகிய இரண்டையும் இடித்துவிட்டு, புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு ரூ. 29.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான, பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்படவுள்ளது.

இதையொட்டி, சந்தைப்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம், தற்காலிகமாக அரசு மருத்துவமனை பின்புறம் ஒத்தைத்தெருவில் உள்ள நகராட்சி மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டடத்தின் தரைத் தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனை நகா்மன்றத் தலைவா் மன்னை த. சோழராஜன் திங்கள்கிழமை திறந்து வைத்து, மக்களுக்கு உணவு வழங்கினாா். மேலும், உணவின் தரத்தை ஆய்வு செய்து, அம்மா உணவகத்தில் பணியாற்றுபவா்களிடம் புதிய கட்டடத்தில் உள்ள வசதிகள், குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம், ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன், பொறியாளா் குணசேகரன், மேலாளா் ஜெ. மீராமன்சூா், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT