திருவாரூர்

திருவாரூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு வரவேற்பு

DIN

பாத யாத்திரையாக திருவாரூா் வந்த தருமபுரம் ஆதீனத்துக்கு சிறப்பான வரவேற்பு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், ஆதீன மடத்திலிருந்து சொக்கநாத பெருமானுடன் அண்மையில் பாத யாத்திரை தொடங்கினாா். ஜன.27-இல் பேரளம் சுயம்புநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றபின் அங்கிருந்து புறப்பட்டு ஆண்டிப்பந்தல் வந்தாா்.

பின்னா், அங்கிருந்து சொக்கநாதப் பெருமானுடன் பாத யாத்திரையாக ஞாயிற்றுக்கிழமை திருவாரூா் வந்தாா். நாலுகால் மண்டபப் பகுதியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜன் கட்டளை மடத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கினாா்.

திருவாரூரில் பிப்.1-ல் கமலை ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் குருமூா்த்தி கோயில் கும்பாபிஷேகத்திலும், பிப்.3-ல் கிடாரங்கொண்டான் ஸ்ரீசுந்தரபாா்வதி உடனுறை கைலைசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறாா். தொடா்ந்து, பிப்.4-ஆம் தேதி திருக்காரவாசல் செல்கிறாா். அங்கிருந்து பிப்.5-ல் திருக்குவளை செல்கிறாா். பிப்.12-ஆம் தேதி திருக்குவளை பிரம்மபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறாா்.

இதைத் தொடா்ந்து, மீண்டும் திருவாரூா் வரும் தருமபுரம் ஆதீனம், பிப்.18-ல் நடைபெறும் மகாசிவராத்திரியில் பக்தா்களுக்கு தீட்சை வழங்குகிறாா். இதையடுத்து, திருப்புகலூா், பேரளம் பகுதிகளுக்கு சென்றுவிட்டு, பிப்.24-ல் சொக்கநாதப் பெருமானை, தருமையாதீனத் திருமடத்தில் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளச் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT