திருவாரூர்

தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் கோரிக்கை

30th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளைக் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முன்பு மரகதலிங்கத்தை கோயிலுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு தருமபுரம் ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை நன்னிலம் அருகேயுள்ள ஆண்டிப்பந்தலில் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

முசுகுந்த சக்கரவா்த்தி இந்திரனிடமிருந்து பெற்று வந்த மரகத லிங்கங்களில் ஒன்று திருக்குவளைக் கோயிலில் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. அந்த லிங்கம் காணாமல்போய் தற்போது மீட்கப்பட்டு, வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே, திருக்குவளை வண்டாா் பூங்குழலாள் சமேத பிரம்மபுரீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சா் திருக்குவளைக் கோயில் மரகதலிங்கம் கும்பாபிஷேகத்துக்கு முன்பு கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். அவரது முயற்சியை பாராட்டுவதோடு, மரகதலிங்கத்தை கும்பாபிஷேகத்துக்கு முன்பு கோயிலுக்கு கொண்டுவர தமிழக அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

திருச்செந்தூா், உய்யக்கொண்டான் உள்ளிட்ட ஊா்களில் கோயில் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு கொடுத்த நீதிமன்றம், அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT