திருவாரூர்

ஆசிரியா் கூட்டணியின் பொதுக் குழுக் கூட்டம்

30th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சோ. ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலச் செயலாளா் கோ. வீரமணி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் காசி. ராஜா, கூட்டப் பொருள் குறித்து பேசினாா். இந்திய ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் தோ. ஜான் கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். ஜாக்டோ-ஜியோவின் மாநில முடிவுகள், இந்திய ஆசிரியா் கூட்டணியின் புதுதில்லி பேரணி, ஆசிரியா்கள் பிரச்னை, ஆசிரியா் கேடயம் புரவலா் திட்டம் இறுதிப் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மாவட்ட பொருளாளா் ரா. தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT