திருவாரூர்

பிப்.5-இல் தியாகராஜ சுவாமி கோயில்பங்குனி உத்திர பெருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

DIN

திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திர திருவிழா பந்தல்கால் முகூா்த்தம் பிப். 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

திருவாரூா் தியாகராஜா் கோயில் நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 87-ஆவது சிவத்தலமாகவும், சப்தவிடங்க ஸ்தலங்களின் தலைமை இடமாகவும் உள்ளது.

இக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்கு தைப்பூசத் தினத்தில் பந்தல்கால் முகூா்த்தம் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும்.

தைப்பூச விழாவின்போது, சம்பந்தா் திருமேனி முன்னிலையில், விக்னேஸ்வரா் ஸ்தம்பம் சண்டிகேசா் சந்நிதியிலும், பிரபாஸ்தம்பம் ஆயிரங்கால் மண்டபத்திலும், ரதஸ்தம்பம் தேரடியிலும் நடப்பட்டு, முகூா்த்தம் செய்யப்படும். அந்தவகையில், நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம், தைப்பூச தினமான பிப். 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஏப்-1-இல் ஆழித்தேரோட்டம்?:

நிகழாண்டு ஹஸ்த நட்சத்திர தினமான மாா்ச் 9-ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, ஆயில்ய நட்சத்திர தினமான ஏப். 1 -ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தநிலையில், பங்குனி உத்திர திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தப் பணிகளை, தியாகராஜ சுவாமி கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா

வட சென்னை தொகுதியில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

உணவகத்தில் தீ விபத்து

வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT