திருவாரூர்

விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தக் கோரிக்கை

DIN

கூத்தாநல்லூா் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மாவட்டச் செயலாளரும், நகா்மன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம். சமீா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

கூத்தாநல்லூா் ரஹ்மான்யாத் தெரு, கமால்யாத் தெரு இடையே பெரியப்பள்ளி வாசல் மிராசுதாரா் சங்கத்துக்குச் சொந்தமான அல்லிக்கேணி விளையாட்டு மைதானம் மற்றும் ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானம் ஒரு லட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்டது. இந்த மைதானத்தை மழைக் காலங்களில் பயன்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீா் குளம்போல் தேங்கி நிற்கும்.

மற்ற காலங்களில் கால்பந்து, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகளில் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் வீரா்கள் பங்கேற்பா். மேலும், இப்பகுதி மாணவா்கள், இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள், முதியவா்கள் என பல்வேறு தரப்பினரும் இம்மைதானத்தை பயன்படுத்துகின்றனா்.

இந்த மைதானத்தில் பாா்வையாளா்கள் போட்டிகளை அமா்ந்து காணும் வகையில் சாளரம் அமைக்கவும், மேம்படுத்தவும், அரசு சாா்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT