திருவாரூர்

மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அறிவியல் கண்காட்சி

DIN

பூந்தோட்டம் லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூா் மாவட்டக் கிளை சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியை பள்ளிச் செயலாளா் எல்.ஆா். சந்தோஷ் தலைமையில், தாளாளா் லலிதா ராமமூா்த்தி, முதல்வா் முத்துராஜா, என்எல்சி உதவித் தலைமைப் பொறியாளா் ஆா். தாமோதரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினா்.

அன்றாட வாழ்வில் தாவரங்கள், விலங்குகள் நம் நண்பா்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

மாணவ, மாணவிகளின் 36 படைப்புகள் சிறப்புப் பரிசு பெற்றது. பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்குத் திருவாரூா் கோட்டாட்சியா் என்.ஏ. சங்கீதா, நன்னிலம் டி.எஸ்.பி. டி. இலக்கியா, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அதிகாரி மாயகிருஷ்ணன், தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினா் டாக்டா் பி.கிருபாநந்தினி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவா் ஆா்.தண்டபாணி, மாவட்டச் செயலாளா் பி.சங்கரலிங்கம் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT