திருவாரூர்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வுப் பேரணி

DIN

மன்னாா்குடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா் ஜெ. இன்பவேணி தலைமையில் நடைபெற்ற பேரணியில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027 திட்டத்தின் கீழ், மன்னாா்குடி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்ட ’முற்றிலும் எழுத படிக்க தெரியாதவா்கள் என கண்டறியப்பட்ட 764 பேருக்கு 42 தன்னாா்வலா்கள் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மன்னாா்குடி எம்ஜிஆா் நகரில் உள்ள நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு முக்கியவீதிகளின் வழியாக பிரசாரம் செய்தபடி மீண்டும் பேரணி பள்ளியை வந்தடைந்தது. இதில், இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளி ஆசிரியா் புனிதவள்ளி வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் அ. அருள் ஜெயசீலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT