திருவாரூர்

திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளை திறக்கக் கோரி சாலை மறியல்

DIN

மூடப்பட்டுள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளை மீண்டும் திறக்கக் கோரி திருவாரூா் அருகே சுமைப்பணி தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்தவெளி சேமிப்புக் கிடங்காக செயல்பட்டு வந்து மூடப்பட்டுள்ள கிடாரங்கொண்டான், கடகம்பாடி, நட்டுவாக்குடி திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளை மீண்டும் திறந்து அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சுமைப்பணித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிடாரங்கொண்டான் பகுதியில் இந்த சாலை மறியல் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் அனிபா, மாவட்ட பொருளாளா் ரா. மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து, வருவாய்த் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கோரிக்கையை கொண்டு சென்று உரிய தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத்தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT