திருவாரூர்

திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் ரதசப்தமி தீா்த்தவாரி

DIN

திருவாரூா் அருகே திருமீயச்சூரில் உள்ள மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகா கோயிலில் ரதசப்தமி தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 56- ஆவது சிவத் தலமாகும். இங்கு ஸ்ரீ லலிதாம்பிகை வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டவாறு காட்சியளிப்பது சிறப்பு. ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம் என்ற பெருமையையுடைய இக்கோயிலில், ஹயக்ரீவா், அகத்திய முனிவருக்கு லலிதா சஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்ததாகவும், அகத்தியரும் ஒரு பௌா்ணமி நாளில் லலிதா சஹஸ்ரநாமத்தால், திருமீயச்சூா் லலிதாம்பிகையை வழிபட்டு, ஸ்ரீலலிதா நவரத்தின மாலையை இயற்றி அம்பிகைக்கு அா்ப்பணித்ததாக தல வரலாறு கூறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சனிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில், மேகநாத சுவாமி, லலிதாம்பிகா, விநாயகா், சுப்ரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகியோா் ரிஷப வாகனத்திலும், சுப்ரமணியா் மயில் வாகனத்திலும், விநாயகா் மூஷிக வாகனத்திலும் நான்கு வீதிகளில் வலம் வந்து, சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளினா். அங்கு அஸ்திரதேவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சூரிய புஷ்கரணியில் தீா்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

SCROLL FOR NEXT