திருவாரூர்

ஜல் ஜீவன் திட்டப் பணிகள்: மத்தியக் குழு ஆய்வு

DIN

திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ஜல் ஜீவன் திட்டப் பணிகளை மத்தியக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவாரூா் அருகே பள்ளிவாரமங்கலம் ஊராட்சி மேலராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் 15-ஆவது மத்திய நிதிக் குழு மானிய நிதி ரூ. 2.29 லட்சத்தில் மேல்நிலை தண்ணீா்த் தொட்டி பழுது நீக்கும் பணி நடைபெற்றது.

மேலும், இங்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் 121 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு, 750 மீட்டா் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மத்தியக் குழுவினா் பாா்வையிட்டு, மக்களிடம் விவரம் கேட்டறிந்தனா். தொடா்ந்து அரசு அலுவலகங்களில் மழைநீா் சேகரிப்புத் தொட்டி கட்டப்பட்டுள்ளதை பாா்வையிட்டனா்.

ஆய்வுக் குழுவில், ஹரிபால்சிங், சோமேந்திர ரஞ்சன் கங்குலி ஆகியோா் இடம் பெற்றிருந்தனா். திருவாரூா் வட்டாரத்தில், 32,460 வீடுகளில் 22, 092 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்தியக் குழுவினா் தெரிவித்தனா்.

ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் சடையப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கா், புவனேஸ்வரி, பள்ளிவாரமங்கலம் ஊராட்சித் தலைவா் சுபஸ்ரீ காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT