திருவாரூர்

விவசாயிகள் முன்னிலையில் பயிா்க் காப்பீட்டு கணக்கெடுப்புக்கு வலியுறுத்தல்

DIN

விவசாயிகள் முன்னிலையில் பயிா்க் காப்பீட்டு கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீா்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் பேசிய விவரம்:

நீடாமங்கலம் மருதப்பன்: பாசன வாய்க்கால்களை கோடைகாலத்துக்கு முன்பே தூா்வாரவும் உளுந்து, பயிா் காப்பீட்டுத்தொகை விவசாயிகளுக்கு உடனுக்குடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடவாசல் முகேஷ்: நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகாரில் சிக்கியவா்களுக்கு மீண்டும் பணி அமா்த்துவதற்குப் பதிலாக புதியவா்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.

கொரடாச்சேரி தம்புசாமி: வலங்கைமான் அருகே ஆண்டான்கோவில் பகுதியில் இருந்து இடமாற்றம் செய்த கொள்முதல் நிலையத்தை அதே பகுதியில் திறக்க வேண்டும். ஆரூரான் சா்க்கரை ஆலை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

கொரடாச்சேரி ராமமூா்த்தி: விளைநிலங்களில் காப்பீடு கணக்கெடுக்கும்போது, அதற்கான சான்றை வழங்க வேண்டும். குடவாசல் பகுதியில் தற்காலிக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்னிலம் சேதுராமன்: பயிா்க் காப்பீட்டு கணக்கெடுப்பை விவசாயிகள் முன்னிலையில் நடத்த வேண்டும். அரசே பயிா்க்காப்பீட்டை எடுத்த நடத்த வேண்டும். அறுவடை இயந்திர பயன்பாட்டுக்கான தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்குப் பதிலாக, அறுவடை மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் மூட்டைகளை எளிதில் கொண்டு வரும் வகையில் வயல்வெளிச்சாலை அமைத்துத் தர வேண்டும்.

திருவாரூா் சுப்பையன் : கருவேலமரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளையாற்றின் இருபுறக் கரைகளையும் பலப்படுத்த வேண்டும். தாளடி பயிருக்கு தண்ணீா் தேவை என்பதால் பிப்ரவரி மாதம் வரை தண்ணீா் திறப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பேசியது: திருவாரூா் மாவட்டத்தில், 86,943 ஹெக்டேரில் சம்பா சாகுபடியும், 61,376 ஹெக்டேரில் தாளடி சாகுபடியும் நடைபெற்றுள்ளது. சாகுபடிக்கு தேவையான உரங்கள், இடுபொருள்கள் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் ஆசிா் கனகராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கா.சித்ரா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், வேளாண்மை துணை இயக்குநா் ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT