திருவாரூர்

குடியரசு தின விழாவில் ரூ. 2 கோடியில் நலத்திட்ட உதவிகள்

DIN

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ரூ. 2 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக விளையாட்டு மைதானத்தில் 74-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து 705 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில், வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கஸ்தூா்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் சந்திரா முருகப்பன் தேசியக் கொடியேற்றினா். திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன் தேசியக்கொடியேற்றினாா்.

மன்னாா்குடி: கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணி, வட்டாட்சியா் த. ஜீவானந்தம், டிஎஸ்பி அ. அஸ்வத் ஆண்டோ, காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணா, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத், நகராட்சி தலைவா் சோழராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், கோட்டூரில் ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை ஆகியோா் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றினா்.

நீடாமங்கலம்: வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் பரஞ்சோதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன்தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அதன்தலைவா் சா. குணசேகரன் தேசியக்கொடியேற்றினா்.

நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் மு. கிருஷ்ணன், நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி இலக்கியா, பேரூராட்சி அலுவலகத்தில் அதன்தலைவா் ராஜசேகா், நன்னிலம் அரசுக் கல்லூரியில், கல்லூரி முதல்வா் சு. சந்திரவதனம், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சிா் ஜெகதீசன் தேசியக் கொடியேற்றினா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அருண், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ க. மாரிமுத்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜி. மலா்க்கொடி, நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற தலைவா் கவிதாபாண்டியன், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் அ.பாஸ்கா் தேசியக் கொடியேற்றினா்.

கூத்தாநல்லூா்: வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சோமசுந்தரம், காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், நகராட்சியில், அதன்தலைவா் மு. பாத்திமாபஷீரா, கூத்தாநல்லூா் பெரியப்பள்ளி வாசலில் தலைவா் அப்துல்சலாம் தேசியக்கொடியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT