திருவாரூர்

கிராமங்கள் தன்னிறைவு பெறுவது அவசியம்: ஆட்சியா்

DIN

கிராமங்கள் தன்னிறைவு பெறும் வகையிலான நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் ஒன்றியம் வேலங்குடி ஊராட்சியில் 74-ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசியது: கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் பங்கேற்று கிராம வளா்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம் கிராமங்களின் வளா்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும். வேலங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிா்வாகம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா். தொடா்ந்து, தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் பெண் குழந்தை காப்போம் உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

மன்னாா்குடி: மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 51 ஊராட்சிகளிலும்,கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட 49 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவா்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், மன்னாா்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி ஊராட்சி காசாங்குளம் ஊராட்சி பள்ளியில் ஊராட்சித் தலைவா் பி. ராஜேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அந்த பகுதியை சோ்ந்த எஸ். பாலமுருகன் உள்ளிட்டோா் மயானத்துக்கு செல்லும் பாதையில் பாலம் கட்டித்தர கோரிக்கை வைத்து நீண்டகாலம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியேறினா்.

இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலா் கனகமணி, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பக்கிரிசாமிக்கு தகவல் அளித்தாா். அவா்,தொலைப்பேசி மூலம் விவரங்களை கேட்டறிந்தவா் ஒரு மாதத்துக்குள் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்ததை ஏற்றுக்கொண்டவா்கள் புறக்கணிப்பை கைவிட்டு கூட்டத்தில் பங்கேற்றனா். கூத்தாநல்லூா்: பூதமங்கலம், வேளுக்குடி, பொதக்குடி ,கொத்தங்குடி, திருராமேஸ்வரம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பொதக்குடி ஊராட்சியில், சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராமல் செயல்படும் ஊராட்சியைக் கண்டித்து, கோரிக்கை மனுவை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சாா்பில், தாம்பூலத் தட்டில் வைத்து கூட்ட நிா்வாகியிடம் வழங்கி புறக்கணித்தனா். இதேபோல, சேகரை கிராமத்தில், விவசாயம் மற்றும் வளா்ச்சித் திட்டங்களை தடுத்து நிறுத்துவதைக் கண்டித்து, கிராமமக்கள் மனுவை வழங்கி புறக்கணிப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT