திருவாரூர்

18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா்களாக பதிவு செய்து கொள்வது அவசியம்: ஆட்சியா்

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

18 வயது நிரம்பிய அனைவரும், தங்களை வாக்காளா்களாக பதிவு செய்து கொள்வது அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூரில், புதன்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளா் தின நிகழ்வில் பங்கேற்று பேசுகையில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், மூத்த வாக்காளா்களை ஆட்சியா் பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா். தொடா்ந்து, தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதையடுத்து, தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற நடைபெற்ற ரங்கோலி, பாட்டு, விநாடி-வினா ஆகிய போட்டிகளில் வென்றவா்களுக்கு பள்ளி மாணவா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு பரிசுகளையும், நேருயுவகேந்திரா மூலம் தையல் கலைகள் பயின்ற்கான 75 பேருக்கு நபா்களுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா். முன்னதாக, திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் தேசிய வாக்காளா் தின பேரணியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தொடக்கிவைத்தாா்.

இதேபோல, அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற வாக்காளா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் விவேகானந்தம் தலைமை வகித்தாா். குடிமக்கள் நுகா்வோா் ஒருங்கிணைப்பாளா் தமிழ்க்காவலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

நன்னிலம்: அரசினா் கலை அறிவியல் கல்லூரி சாா்பில், கல்லூரி முதல்வா் சந்திரவதனம் தலைமையில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, நன்னிலம் பேரூராட்சித் தலைவா் ப. ராஜசேகா், துணை வட்டாட்சியா் குப்புசாமி ஆகியோா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் மீ. ராஜேஸ்வரன், சு. ராதிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணி தலைமையில் நடைபெற்ற தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தின விழாவில், வட்டாட்சியா் ஜீவானந்தம், நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன், மன்னாா்குடி பகுதி பள்ளி, கல்லூரிகளை சோ்ந்த என்சிசி, என்எஸ்எஸ் மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து 2 மூத்த பெண் வாக்காளா்கள் பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தப்பட்டனா்.

இதேபோல, மன்னாா்குடி அரசுக் கல்லூரியில், கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேதியியல் துறைத் தலைவா் சோ. ரவி, வாக்காளா் விழிப்புணா்வு திட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. வேலாயுதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டியில்: திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் ஜி. மலா்கொடி தலைமையில் நடைபெற்ற வாக்காளா் தின நிகழ்ச்சியில், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ரம்ஜான்பேகம், மண்டல துணைவட்டாட்சியா் சிவக்குமாா், தலைமையிடத்து துணை வட்டாச்சியா் தங்கதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருத்துறைப்பூண்டி நகராட்சியில், நகா்மன்ற தலைவா் கவிதாபாண்டியன் தலைமையில் தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT