திருவாரூர்

வேளாண் மாணவிகள் களப்பயிற்சி

22nd Jan 2023 12:19 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலம் ஊராட்சி மேல் அமராவதியில் தஞ்சாவூா் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் பாரம்பரிய நெல் சாகுபடி தொடா்பாக வெள்ளிக்கிழமை களப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் விவசாயி இளங்கோவன் பாரம்பரிய சீரக சம்பா நெல் சாகுபடி செய்துள்ள வயலுக்குச் சென்ற மாணவிகள், ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் அங்கக முறையில் சாகுபடி செய்துவருவது குறித்து அவரிடம் கேட்டறிந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT