திருவாரூர்

தாட்கோ கணக்கு நிா்வாகப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

22nd Jan 2023 10:49 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் நடைபெறும் கணக்கு நிா்வாகப் பணி பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, திருவாரூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சாா்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற தாட்கோ நிறுவனம் தனியாா் வங்கியுடன் இணைந்து கணக்கு நிா்வாகப் பணிக்கான பயிற்சி அளிக்க உள்ளது.

ADVERTISEMENT

இப்பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இவா்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 20 நாட்கள். மேலும், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதிகள் மேற்கொள்ளப்படும்.

இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தோ்வுக்கு அனுமதிக்கப்படும். இத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு பிஎம்எஸ்ஐ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், தனியாா் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிா்வாக பணியில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். இப்பணியில் தொடக்க நிலை ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை பெறலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும்.

இப்பயிற்சியைப் பெற தாட்கோ இணையதளமான  இணையதள முகவரியில் குடும்ப அட்டை, ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை, புகைப்படம், கல்வித்தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளா் அலுவலகம், அரசு ஆதிதிராவிடா் மாணவா் விடுதி எதிரில், நாகை பைபாஸ் ரோடு, திருவாரூா் என்ற முகவரியிலும், 04366-250017 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT