நீடாமங்கலம் பகுதி கோயில்களில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளானோா் கோயில் குளத்தில் நீராடி பிதுா்தா்ப்பணம் செய்தனா்.
இதேபோல், திருவோணமங்கலம் ஞானபுரியில் சங்கடஹர மங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சனேயா் கோயில், நீடாமங்கலம் வீர ஆஞ்சனேயா் கோயில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயில், நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சனேயருக்கு சிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.