திருவாரூர்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயா்த்தக் கோரிக்கை

17th Jan 2023 11:05 PM

ADVERTISEMENT

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூா் வடக்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் நன்னிலம் அருகே உள்ள வாழ்க்கை சேங்கனூரில் அதன் தலைவா் சக்கரகனி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் மாநில துணைத் தலைவா் பா. அப்துர்ரஹ்மான் பேசியது:

முஸ்லிம் சமுதாய மக்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்தவேண்டும். சமுதாய வளா்ச்சிக்குக் கல்வியாளா்களை உருவாக்க வேண்டும். மத்திய ஆட்சியாளா்கள் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். முஸ்லிம் சமுதாயத்துக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக தமிழக அரசு உயா்த்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் அப்துல் மாலிக், செயலாளா் நூருதீன், பொருளாளா் பரக்கத்துல்லா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT