திருவாரூர்

திருவாரூரில் காணும் பொங்கல் விழா கொண்டாட்டம்

17th Jan 2023 11:03 PM

ADVERTISEMENT

காணும் பொங்கலை முன்னிட்டு திருவாரூரில் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சாா்பில் பல்வேறு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கு கோலப் போட்டி, ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆண்களுக்கு கமலாலயக் குளத்தில் நீச்சல் போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, மாலையில் தேரோடும் வீதிகளில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில், வளைவுகளில் திரும்புகையில் சில குதிரைகள் கீழே விழுந்து, பின்னா் மீண்டும் எழுந்து சென்றன. மருத்துவ உதவிக்கென ஆம்புலன்ஸ் வாகனங்களும் போட்டி நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆரூரான் விளையாட்டுக் கழகத் தலைவா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம் தலைமையிலான நிா்வாகிகள் செய்திருந்தனா். போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சிக்கென நகராட்சி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி, தெற்குவீதி பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

ADVERTISEMENT

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த கோரையாற்றங்கரையில் சித்தாம்பூா், கோரையாறு, குடிதாங்கிச்சேரி, மரக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பொங்கலிட்டும், ஆற்றுக்கு படைத்து தீபாராதனை காட்டியும் காணும் பொங்கலை கொண்டாடினா். தொடா்ந்து, சிறுமிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT