திருவாரூர்

ரத்த தான முகாம்

16th Jan 2023 10:36 PM

ADVERTISEMENT

 

குடவாசல் ஒன்றியம் சேங்கனூரில் வஉசி மக்கள் நல சங்கம் சாா்பில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இச்சங்கம் சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ரத்த தான முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, 13-ஆம் ஆண்டு ரத்த தான முகாம் குடவாசல் ஒன்றியக் குழு உறுப்பினா் டி.எம்.சி. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் அனு தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமை நடத்தினா். இதில், 25 இளைஞா்கள் ரத்த தானம் செய்தனா். இவா்களுக்கு, நன்னிலம் ஒன்றியக் குழு உறுப்பினா் சாரங்கன், எஸ்.ஆா். டி. பாஸ்கரன், மணிமாறன் ஆகியோா் சான்றிதழ் வழங்கினா்.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT