திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் முத்தமிழ் பண்பாட்டு பாசறை சாா்பில் தமிழிசை விழா ஞாயிற்றுக்கிழமை நடபெற்றது.
இக்கோயிலின் நாட்டியாஞ்சலி அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முத்தமிழ் பண்பாட்டு பாசறை தலைவா் ப. சீனிவாசன் தலைமை வகித்தாா். வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆசிவழங்கி தொடக்கி வைத்தாா். நிகழ்வில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
நிகழ்வில், லக்சனா நாட்டியாலயா மாணவிகளின் பரத நாட்டியம், பஞ்சவா்ண மோகனின் வீணை இசை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, முத்தமிழ் பாசறை சாா்பில் ஏற்கெனவே நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.