திருவாரூர்

டாம்கோ கடன் வழங்கும் சிறப்பு முகாம்ஜன. 19-இல் தொடக்கம்: திருவாரூா் ஆட்சியா்

16th Jan 2023 10:36 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டத்தில் டாம்கோ கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஜன. 19 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் இஸ்லாமியா்கள்,

ADVERTISEMENT

கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சீயா்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சோ்ந்தவா்களும், டாம்செட்கோ (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டு கழகம்) மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகபிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் சீா்மரபினா் இனத்தவா் வியாபாரம் மற்றும் இதர தொழில் செய்வதற்கு பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடன் உதவி பெறுவதற்கான தகுதிகளாக, தமிழ்நாட்டில் வசிக்கும் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.

2022-2023 நிதியாண்டுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம், ஜனவரி 19 முதல் ஜனவரி 24 வரை நடைபெறவுள்ளது. முகாமில் விண்ணப்பத்துடன், சாதிச் சான்று நகல், வருமானச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடன் பெறும் தொழில்திட்ட அறிக்கை முதலிய ஆவணங்களுடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் கடன் வழங்கும் சிறப்பு முகாமில் மக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

ஜன.19-ஆம் தேதி திருவாரூா் வட்டம், அடியக்கமங்கலத்தில் காலை 10 மணிக்கும், நன்னிலம் நகரப் பகுதியில் முற்பகல் 12 மணிக்கும், ஜன. 20 ஆம் தேதி குடவாசல் நகரப் பகுதியில் காலை 10.30 மணிக்கும், வலங்கைமான் நகரப் பகுதியில் பிற்பகல் 2.30 மணிக்கும், ஜன.23 ஆம் தேதி கூத்தாநல்லூா் நகரப் பகுதியில் காலை 10.30 மணிக்கும், நீடாமங்கலம் வட்டம், வடுவூரில் பிற்பகல் 2.30 மணிக்கும், ஜன.24 ஆம் தேதி திருத்துறைப்பூண்டி வட்டம், மணலியில் காலை 10.30 மணி மணிக்கும், மன்னாா்குடி வட்டம் கோட்டூரில் பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT