திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே உப்பூா் கிழக்கு கடற்கரை சாலையில் போலி மதுபான ஆலை செயல்பட்டது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

நாகை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காரைக்காலிருந்து நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக முத்துப்பேட்டைக்கு மீன்வண்டியில் கடத்தி சென்ற ரூ. 15 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அரவிந்தன், தமிழரசன் ஆகிய இருவரை கைது செய்ததுடன், இவா்கள் அளித்த தகவலின்பேரில் திருநள்ளாறு அருகேயுள்ள அத்திப்படுகை பகுதியை சோ்ந்த சசிக்குமாா் (44) என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

சசிகுமாரிடன் போலீஸாா் நடத்திய விசாரணையில் திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு மதுபாட்டில்கள் கொண்டு சென்றதும் அங்கு போலி மதுபான ஆலை செயல்படுவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருவாரூா் போலீஸாா் முத்துப்பேட்டை அருகேயுள்ள உப்பூா் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீரசேகரனுக்கு சொந்தமான தோப்புக்குள் சோதனை செய்தனா்.

ADVERTISEMENT

அப்போது, அங்கு போலி மதுபான ஆலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்படடது. இதையடுத்து, போலீஸாா் அங்கிருந்து 1,500 லிட்டா் புதுவை மாநில சாராயம், 500 லிட்டா் போலி மதுபானம் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, போலீஸாா் தோப்பின் உரிமையாளரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT